< Back
வானிலை
இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வானிலை

இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தினத்தந்தி
|
3 Dec 2024 5:29 PM IST

சேலம், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய "பெஞ்சல்" புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்