6 மாவட்டங்களில் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
|சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் தற்போது வரை விட்டு விட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.