சென்னையில் ஒரு சில இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு
|தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) அல்லது அதற்கு அடுத்த நாள் (வியாழக்கிழமை) வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை மறுதினம் முதல் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.