< Back
வானிலை
தமிழகத்தில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பா..? - வெளியான தகவல்

கோப்புப்படம்

வானிலை

தமிழகத்தில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பா..? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
29 Oct 2024 10:02 AM IST

தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (31-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளியன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி வரும் 31-ம் தேதி மற்றும் நவ., 1-ம் தேதிகளில் தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்