< Back
வானிலை
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்
வானிலை

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
3 Nov 2024 5:28 AM IST

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்