< Back
வானிலை
நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வானிலை

நாளை மறுநாள் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தினத்தந்தி
|
12 Dec 2024 9:54 PM IST

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், "வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும். இதனால், மழையும் குறையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. தொடர்ந்து மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் 15-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நாளை மறுநாள் (டிச., 14ம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிச.16-ம் தேதி வட இலங்கை - தமிழகத்தை அடையக்கூடும் என்றும், அடுத்த 2 வாரத்திற்கு புயல் உருவாக வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்