< Back
வானிலை
வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை
வானிலை

வலுவிழந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை

தினத்தந்தி
|
26 Dec 2024 5:46 AM IST

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

சென்னை,

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது.

இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 5.30 மணியளவில் கடலிலேயே வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 31-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை லேசானது முதல் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், புதுப்பேட்டை, அண்ணாசாலை, வடபழனி, அசோக் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் கடலூர், விழுப்புரம், கோவை, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், தி.மலை, திருச்சி, ராணிப்பேட்டை, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்