< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
|6 Jan 2025 5:54 PM IST
பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுவன் ஒருவன், பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 36) என்பவர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் கூச்சலிட்டான்.
சிறுவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கார்த்தியை பிடித்து புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். ஏற்கனவே கார்த்தி மீது சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.