< Back
மாநில செய்திகள்
15 வயது சிறுவனுடன் மாயமான இளம்பெண் போக்சோவில் கைது

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

15 வயது சிறுவனுடன் மாயமான இளம்பெண் போக்சோவில் கைது

தினத்தந்தி
|
1 Jan 2025 12:07 PM IST

சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை,

சென்னையில் 15 வயது சிறுவனுடன் மாயமான 22 வயது இளம்பெண்ணை பாண்டிச்சேரி சென்று அழைத்து வந்த போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை, எம்.ஜி.ஆர்., நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் வீட்டில் டியூசன் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி வெளியில் சென்ற சிறுவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சிறுவனின் பெற்றோர் எம்.ஜி.ஆர்., நகர் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணையில், சிறுவன் தனக்கு டியூசன் எடுத்த பெண்ணின் தங்கையான, 22 வயது இளம்பெண் மற்றும் ராகுல் (19 வயது) என்ற இளைஞருடன், பாண்டிச்சேரி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பாண்டிச்சேரி சென்ற போலீசார் மூவரையும் அழைத்து வந்தனர். இளம்பெண் மற்றும் ராகுல் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுவனும் இளம்பெண்ணும் காதலித்து வந்ததும், அதற்கு ராகுல் உதவியதும் தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்