< Back
ஆன்மிகம்
பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
ஆன்மிகம்

பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

தினத்தந்தி
|
10 Feb 2025 11:29 PM IST

ஏராளமானவர்கள் கலந்துகொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டனர்.

தஞ்சை,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள்.

இந்த நிலையில், சோம வார பிரஷோதத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட விபூதி, மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம், எலுமிச்சம்பழம், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியம் பெருமானை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்