< Back
தமிழக செய்திகள்

சென்னை
தமிழக செய்திகள்
மதுரை தென்பகுதி புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது: அமைச்சர் எ.வ.வேலு

8 April 2025 11:44 AM IST
மதுரை தென்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் ஆய்வில் உள்ளது என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. தென் பகுதியிலும் புறவழிச்சாலை அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, "தென்பகுதியில் இருக்கின்ற மதுரைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நகர பகுதியில் இருக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரிபாளையம் பாலம், அப்போலோ பாலம் என இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தென் பகுதியில் புறவழிச்சாலை ஆவசியம் தான். அது சம்பந்தமாக துறையின் சார்பில் ஆய்வில் உள்ளது. ஆய்வு முடிந்த பிறகு முதலமைச்சரிடம் எடுத்து சென்று இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.