< Back
மாநில செய்திகள்
அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த பெண் கைது
மாநில செய்திகள்

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.4 கோடி மோசடி செய்த பெண் கைது

தினத்தந்தி
|
22 Dec 2024 10:10 PM IST

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.4 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி கார்த்திகா (35 வயது). இவர், தனியார் இ-சேவை மையம் நடத்தி வந்தார். அப்போது, இந்த மையத்துக்கு வந்தவர்களிடம் அரசு வேலை, முதியோர் உதவித்தொகை மற்றும் அரசு நலத்திட்டங்களை பெற்றுத் தருவதாக கூறி 30-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

அதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி இ-சேவை மையத்துக்கு 'சீல்' வைத்தனர். மேலும் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கார்த்திகாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் கைது செய்தனர்.

இதனையடுத்து கார்த்திகா நடத்தி வந்த இ-சேவை மையம் மற்றும் அவரது வீட்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் கோகுல், தாசில்தார் செல்வி மற்றும் வருவாய்த்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க் மற்றும் பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்