< Back
மாநில செய்திகள்
சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் சொன்ன பதில்
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் சொன்ன பதில்

தினத்தந்தி
|
2 Jan 2025 7:34 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விவகாரத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

மதுரையில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை அ.தி.மு.க. கட்சியில் இருந்து விலக்கியது விதிமீறல். பொறுத்திருந்து பாருங்கள். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது கோர்ட்டு தீர்ப்பின் பின்பு தெரியவரும். அ.தி.மு.க. கட்சி தொண்டர்களின் உரிமையை கட்சி நிறுவனர் எம்.ஜி.ஆர் நிர்ணயம் செய்திருக்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த விவகாரத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கக்கூடாது. தடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்டதற்கு 'கடைசியாக கொக்கி போட பார்க்கிறீர்கள்' என்று கூறிவிட்டு சென்றார்.

மேலும் செய்திகள்