< Back
மாநில செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தூக்கி சென்ற காட்டு யானை
மாநில செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தூக்கி சென்ற காட்டு யானை

தினத்தந்தி
|
9 Dec 2024 4:55 PM IST

மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை ஒன்று வீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தும்பிக்கையால் தூக்கி சென்றது.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய வனச்சரக பகுதிகளில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று இரவு சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட வேடர் காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஒரு காட்டுயானை புகுந்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை நோக்கி வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வீட்டினர் மறைவான ஒரு இடத்திற்கு சென்றனர்.

இதையடுத்து காட்டுயானை, அந்த வீட்டின் ஒரு அறையின் கதவை உடைத்து தும்பிக்கையால் உள்ளே இருந்த வாழைத்தார் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்றது. இதனை அங்கிருந்தவர்கள் சிலர் தங்களது செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்