< Back
மாநில செய்திகள்
மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு... மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்
மாநில செய்திகள்

மனைவி குடும்பம் நடத்த வர மறுப்பு... மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன்

தினத்தந்தி
|
17 Nov 2024 8:51 AM IST

உயிருக்கு ஆபத்தான நிலையில் மாமியார் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர்,

திருப்பூர் சின்னாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்தாய். இவரது மகள் இசக்கியம்மாள். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரைஎன்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சின்னத்துரை தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி இசக்கியம்மாளை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் இசக்கியம்மாள் திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மனைவியை அழைத்து செல்வதற்காக சின்னத்துரை வந்துள்ளார். அப்போது மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை தாக்கியுள்ளார்.

மேலும் இதனை தட்டிக்கேட்ட பெருமாள்தாயை தாக்கியதோடு சுவரில் பிடித்து தள்ளினார். இதனால் அவரின் மண்டை உடைந்ததில் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதையடுத்து சின்னத்துரை அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். பின்னர் படுகாயம் அடைந்த பெருமாள்தாயை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்