< Back
மாநில செய்திகள்
மனைவி உயிருடன் எரித்துக்கொலை: போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை
மாநில செய்திகள்

மனைவி உயிருடன் எரித்துக்கொலை: போலீசுக்கு பயந்து கணவரும் தற்கொலை

தினத்தந்தி
|
29 Dec 2024 11:32 AM IST

நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை உயிருடன் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

படப்பை,

தாம்பரம், படப்பை அருகே ஆதனுார் ஊராட்சி, ஜெயலட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் செந்தில்குமார், இவரது மனைவி கலையரசி, அரசு அங்கன்வாடி ஊழியர். இவர்களுக்கு, 20 மற்றும் 15 வயதில், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, செந்தில்குமார், கலையரசி துாங்கிக் கொண்டிருந்த அறையில் தீப்பற்றி எரிந்தது.

பெற்றோரின் அலறல் சத்தத்தை கேட்டு, பக்கத்து அறையில் துாங்கிக் கொண்டிருந்த மகள்கள் கூச்சலிட்டதையடுத்து, அருகில் வசிப்போர் மறைமலை நகர், மணிமங்கலம் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், பலத்த தீக்காயம் அடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதுதொடர்பாக மணிமங்கலம் போலீசார் செந்தில்குமாரிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், "மகேந்திரா சிட்டி அருகே உள்ள வீராபுரம் கிராமத்தில் பணியாற்றி வந்த கலையரசி, அதே பகுதியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவருடன் பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், அதிகாலை 3 மணிக்கு, வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த மனைவி கலையரசி மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து, பின் தன் மீதும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்" என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கலையரசி சிகிச்சை பலனின்றி, நேற்று காலை உயிரிழந்தார். செந்தில்குமார் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்