< Back
மாநில செய்திகள்
கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? - அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
மாநில செய்திகள்

கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? - அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்

தினத்தந்தி
|
23 Oct 2024 4:39 PM IST

கவர்னரின் நிகழ்ச்சியை தவிர்ப்பது ஏன்? என்பது குறித்து அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்.

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 56-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 54,714 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார்.

பல்கலைக்கழகங்களின் இணை வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் இல்லாமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிப்பது ஏன்? என்பது தொடர்பாக அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

"கவர்னருடன் மோதல் போக்கை உற்சாகப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள் நாங்கள் அல்ல. கவர்னருடனான தொடர்பு என்பது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் கவர்னருடன் சில விழாக்களில் கலந்து கொண்டோம்.

ஆனால் தற்போது, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கவர்னர் ஆர்.என்.ரவியின் செயலும், பேச்சும் தமிழர்களின் மனம் புண்படும்படி இருந்து வரும் காரணத்தால், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்து புறக்கணித்திருக்கிறேன்."

இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்