< Back
மாநில செய்திகள்
டெல்லியில் நடந்த அதானிக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? - எச்.ராஜா கேள்வி

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

டெல்லியில் நடந்த அதானிக்கு எதிரான போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? - எச்.ராஜா கேள்வி

தினத்தந்தி
|
8 Dec 2024 6:36 AM IST

தி.மு.க.வுக்கு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் மனிதாபிமானமற்ற ஆட்சி நடப்பது துரதிஷ்டவசமானது. சென்னையில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்படி மோசமான நிர்வாகத்திலும் அமைச்சர் அன்பரசன் அகம்பாவத்தோடு பேசுகிறார்.

திருவண்ணாமலையில் நடந்த சம்பவம் கவலை அளிக்கிறது. நெறிமுறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது. இதற்கு வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்கள் பதில் அளிப்பார்கள்.

டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் தி.மு.க. பங்கேற்காதது ஏன்? என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு காவிச்சாயம் பூசாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் கூறிய கருத்து சரிதான். வெள்ள பாதிப்பில் தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்காததால், அமைச்சர் மீது சேற்றை வீசி எறிந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்