< Back
மாநில செய்திகள்
ரஜினியை சந்தித்தது ஏன்? -  சீமான் பதில்
மாநில செய்திகள்

ரஜினியை சந்தித்தது ஏன்? - சீமான் பதில்

தினத்தந்தி
|
22 Nov 2024 2:56 PM IST

அரசியல், திரைப்படம் உள்ளிட்டவை குறித்து ரஜினியுடன் விவாதித்ததாக சீமான் கூறினார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை சீமான் சந்தித்து பேசினார். இந்த நிலையில், சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியை சந்தித்தது குறித்து அவர் கூறியதாவது:-

அன்பின் காரணமாக மரியாதை நிமித்தமான ரஜினிகாந்தை சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது அரசியல், திரைப்படம் உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்தோம். அரசியல் கொடூரமான ஆட்டம். ரஜினிகாந்தின் மனநிலைக்கு இது சரி வராது. இந்த களத்தில் நேர்மையாக இருக்கறது ரொம்ப கஷ்டம்.

நல்ல ஆட்சி கொடுத்தா வாக்குக்கு காசு கொடுக்க வேண்டிய நிலைமை தேவையில்லை. தொடர்ச்சியா அதைத்தான் செய்றாங்க. இதைத்தான் "சிஸ்டம் தவறு" என ஆங்கிலத்தில் ரஜினிகாந்த் சொன்னார். அதை நான் தமிழில் அமைப்பு தப்பா இருக்கு, மாத்தணும்னு சொன்னேன். அதுகுறித்து தான் பேசினோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்