அரசியலுக்கு வந்தது ஏன்? - விஜய் விளக்கம்
|அரசியல் போரில் சமரசமே இல்லை என்று தவெக தலைவர் விஜய் கூறினார்.
விக்கிரவாண்டி,
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:-
அரசியல் போரில் சமரசமே இல்லை. வெறுப்பு அரசியலை எப்போதும் கையில் எடுக்க மாட்டோம்; எதை நினைத்து அரசியலுக்கு வந்தமோ அதை பிசிரு இல்லாமல் செய்து முடிக்கும் வரை நெருப்பாக இருப்போம்.
சினிமாவில் நடிக்கலாம் பணம் சம்பாதிக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் வாழ வைத்த மக்களுக்காக நான் என்ன செய்ய போகிறேன் என்று தினமும் என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. இதற்கு சரியான களம் எது என்று நினைத்த போதுதான் என் மனதில் தோன்றியது "அரசியில்". மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியல் நமக்கு ஒத்துவருமா என்ற பூதக்கண்ணாடி வைத்து யோசித்தால் சரிவராது. பச்சை தமிழர் காமராஜர் வழியில் தவெக செயல்படும். நம்மை பார்த்து வேகமானவர்கள், விவேகமானவர்கள் என்று சொல்ல வேண்டும்.
உலக வரலாறு, உலக இலக்கியம் சொல்லிக்கொண்டு எம்.பி.3 ஆடியோவாக பேசப்போறது இல்லை. அரசியல்வாதிகளாக இருப்பவர்களைப் பற்றி அதிகமாக பேசி நேரத்தை வீணாக்கப்போவதில்லை... அதுக்காக கண்ணமூடிக்கொண்டு இருக்கப்போவதுமில்ல. இவ்வாறு அவர் கூறினார்.