< Back
மாநில செய்திகள்
துரோகம் செய்தது யார்?- செங்கோட்டையன் விளக்கம்
சென்னை
மாநில செய்திகள்

துரோகம் செய்தது யார்?- செங்கோட்டையன் விளக்கம்

தினத்தந்தி
|
14 Feb 2025 12:27 PM IST

தோல்விக்கு துரோகிகள் காரணம் என கூறியது அந்தியூருக்கு மட்டும் பொருந்தும் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு,

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் பேச்சும், செயல்பாடுகளும் தான் கடந்த சில நாட்களாக அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன

ஈரோடு மாவட்டம் கோபியில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். பொதுவாக இது போன்ற விழாக்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் எடப்பாடி பழனிசாமி படம் சிறியதாகவும் அதைவிட சிறியதாக செங்கோட்டையன் படம் இருக்கும். ஆனால் இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் படம் இருக்கும் அதே சைசில் செங்கோட்டையனின் படம் இருந்தது கவனிக்கத்தக்கதாக இருந்தது.

இந்தநிலையில், இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பேசுகையில், திமுக ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம். சில துரோகிகளால் நாம் தேர்தலில் தோற்றோம். அவர்களை அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் என பரபரப்பாக பேசியிருந்தார் இது கட்சியினரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது:-

அந்தியூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு துரோகம்தான் காரணம் என கூறினேன். துரோகம் செய்தார்கள் என பேசியது அந்தியூர் தொகுதிக்கு மட்டுமே பொருந்தும். ஆர்.பி. உதயகுமார் என்னை பற்றி பேசவில்லை. நான் செங்கோட்டையனை விமர்சிக்கவில்லை என ஆர்.பி. உதயகுமாரே கூறிவிட்டாரே. கூட்டத்தில் பேசும் போது கட்சியின் பொதுச்செயலாளர் என தெளிவாக குறிப்பிட்டேன் என்றார்.

மேலும் செய்திகள்