< Back
மாநில செய்திகள்
என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க... விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி
மாநில செய்திகள்

என்ன மிஸ்டர் சீமான் சாபம் எல்லாம் விடுறீங்க... விஜய்க்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி

தினத்தந்தி
|
3 Nov 2024 5:12 PM IST

சீமானை கடுமையாக விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தவெக தலைவர் விஜய் குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:-

என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவேன்னு சாபம் எல்லாம் விடுறீங்க?. நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க..

சோ... (So) கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல விட்டீங்களே.. நீங்க எது அடிச்சு சாகப்போறீங்க மிஸ்டர் சீமான்?. முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் என்ன என முதலில் போய் பாருங்க.

திமுகவுக்கு என்ன பண்ண வேண்டும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்ய வேண்டும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாமல்; காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.

ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே ஒருநாள் சாவீங்க. இந்த வீடியோவை நாம் தமிழர் கட்சியும், சீமானும், கண்டிப்பாக பார்க்க வேண்டும். இவ்வாறு வீடியோவில் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்