சம்பல்பூர்- ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கம்
|சம்பல்பூர்- ஈரோடு இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை,
சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டுக்கு நாளை (புதன்கிழமை) முதல் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதன்படி, நாளை காலை 11.35 மணிக்கு சம்பல்பூரில் இருந்து புறப்படும் சம்பல்பூர்- ஈரோடு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 08311) பெரம்பூர், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் (வியாழக்கிழமை) இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடைகிறது. இந்த ரெயில் 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு 8.30 மணிக்கு சென்றடைகிறது.
இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஈரோடு-சம்பல்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 08312) 13-ந் தேதி முதல் மார்ச் மாதம் 7-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் சேலத்துக்கு 3.47 மணிக்கு வந்தடைந்து பின்னர் 3.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு சாம்பல்பூர் சென்றடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.