< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
'இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' - அமைச்சர் சேகர்பாபு

3 Jan 2025 9:40 PM IST
இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் ஏற்கனவே என் கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும்.
இது சட்டத்தின் ஆட்சி. தெய்வத்தின் சன்னிதானத்தில் அமர்ந்து சொல்கிறேன், இன்னார், இனியவர் என்று பார்க்காமல், தவறு செய்பவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். மக்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் பிரச்சினைகளை குற்றமாக நினைக்கமாட்டோம். அவற்றை குறைகளாக கருதி நிச்சயம் நிவர்த்தி செய்வோம்."
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.