< Back
மாநில செய்திகள்
திருவள்ளுவர் சிலையை பேரறிவு சிலையாக கொண்டாடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலையை 'பேரறிவு சிலை'யாக கொண்டாடுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தினத்தந்தி
|
21 Dec 2024 3:43 AM IST

கலைஞர் அமைத்த சிலையை பேரறிவுச் சிலையாக கொண்டாடுவோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், அது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

சமத்துவம் போற்றும் உலக பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிறது. மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை பேரறிவுச் சிலையாக கொண்டாடுவோம். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்