< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அதானி விவகாரத்தில் விளக்கம் கொடுத்துவிட்டோம்: தமிழிசை சவுந்தரராஜன்
|24 Nov 2024 10:23 AM IST
அதானி விவகாரத்தில் விளக்கம் கொடுத்துவிட்டோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதானி விவகாரத்தில் மத்திய அரசும், பாஜகவும் விளக்கம் கொடுத்துவிட்டார்கள். தமிழ்நாடு போன்ற 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஆளும் அரசுகள்தான் பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியை பொறுத்தவரை, ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
மருத்துவமனை, நீதிமன்ற வளாகத்தில் கத்திக்குத்து நடத்தப்படுகின்றது. நீதிமன்றத்தில் கத்திக்குத்து நடத்தப்படும் அளவிற்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து இறந்திருந்தால் அதிக நிதி கிடைக்கும். பட்டாசு தொழிற்சாலை விபத்து உள்ளிட்டவைகளுக்கு குறைந்த அளவே நிதி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.