
கோப்புப்படம்
எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் - ஆர்.எஸ்.பாரதி

மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்கிறது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்கிறது என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டி உள்ளார். .
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "மத்திய அரசுக்கு வரி பகிர்வை அதிகம் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் இருந்தும், பட்ஜெட்டில் ஓரவஞ்சனை செய்வது ஏன்..? எல்லா வகையிலும் மத்திய அரசுக்கு பொருள் ஈட்டிதருகின்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு வஞ்சித்ததை மக்களிடம் தெரியப்படுத்த போராட்டம், பொதுக்கூட்டங்களை நடத்தினோம். பீகார் போன்ற மாநிலங்களுக்கு கேட்காமல் நிதியை மத்திய அரசு வாரி வழங்கி உள்ளது.
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் செய்துள்ளது. நானும் தமிழச்சி என்று கூறும் நிர்மலா சீதாராமன், இதுவரை தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறார்? நடிக்கிறார்... தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த ஓர வஞ்சனை எனக் கேட்டால் கோபப்படுகிறார். தமிழ்நாடு எம்.பி.கள் கேட்கும் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
டெல்லியில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இருந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும்.
மீனவர்கள் விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு தமிழகம் பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் யு.ஜி.சி. வரைவு விதிகள் உள்ளன. யு.ஜி.சி. விதிகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வெற்றி பெற்றது. இந்தியர்களுக்கு அமெரிக்கா கைவிலங்கு போட்டதை பிரதமர் மோடி கண்டிக்கவில்லை" என்று அவர் தெரிவித்தார்.