< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு
|19 Nov 2024 5:16 PM IST
வெள்ள மீட்பு குழுவிவில் 147 பொறியாளர்கள் உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
147 பொறியாளர்களை கொண்ட வெள்ள மீட்பு குழுவில், ஒருங்கிணைப்பு அலுவலர்களாக மண்டல கண்காணிப்பு பொறியாளர்கள் செயல்படுவார்கள் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளது .
வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி விரைவில், இயல்பு நிலைக்கு திரும்ப தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இந்த குழுவினர் வழங்குவார்கள் என்றும் பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்களின் அறிவுறுத்தல்படி இயற்கை பேரிடர் ஏற்பட்ட இடத்திற்கு நேரடியாகச் சென்று அந்த பகுதியில் நீர்வளத்துறை அதிகாரியுடன் மீட்புப் பணிகளில் மேற்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.