< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு
|19 Nov 2024 1:34 AM IST
அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவானது கடந்த 2 நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 17-ந் தேதி அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
இதற்கிடையே டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மேலும் குறைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு நேற்று மாலை பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கால்வாய் பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.