< Back
தமிழக செய்திகள்

தமிழக செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைவு..!

17 Feb 2025 9:42 AM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.06 அடியாக உள்ளது.
மேட்டூர்,
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து, விநாடிக்கு 318 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையின் நீர் மட்டமானது 110.06 அடியாகவும், நீர் இருப்பு 78.494 டி.எம்.சி. ஆகவும் உள்ளது
நீர் வரத்து குறைந்த நிலையிலும் அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.