< Back
மாநில செய்திகள்
சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தடை
மாநில செய்திகள்

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகளுக்கு தடை

தினத்தந்தி
|
3 Dec 2024 9:25 PM IST

சேலம் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

பெஞ்சல் புயல் காரணமாக கல்வராயன் மலையில் கனமழை பெய்து, அங்குள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையமான ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் 2-வது நாளாக நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

மேலும் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழிப்பாதை சாலைகளில் உள்ள நீரோடைகளிலும் தண்ணீர் அதிக அளவில் வருவதால் சாலைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்