< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

உலக சேலைகள் தினத்தில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்திய வாக்கத்தான் போட்டி

தினத்தந்தி
|
21 Dec 2024 5:31 PM IST

உலக சேலைகள் தினத்தில் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்கத்தான் போட்டியை நடத்தியது.

கலாச்சாரத்திற்கும்,நம் மண்ணின் நேர்த்தியான கலை அடையாளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் சேலையை கௌரவிக்கும் விதமாக ஜவுளிகளின் ஆலயமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி ஆகியோர் இணைந்து #PothysSareeDay என்கிற ஹேஷ்டேக் போட்டியை அறிவித்திருந்தார்கள்.இதில் சேலை அணிந்து வித்தியாசமான ரீல்ஸ்கள் மற்றும் போட்டோ எடுத்து ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்த்திருந்தார்கள். சேலை அணிந்து சிலம்பம் சுற்றி வீரத்தையும்,பெண்மையின் தீரத்தையும் வெளிப்படுத்துவது,சேலை அணிந்து வாகனம் ஓட்டி அசத்துவது,அழகிய புதுமைகளாக வெவ்வேறு கலாச்சார பின்னணி கொண்ட சேலைகள் அணிந்து ஆச்சரியப்பட வைக்கும் ஆயிரக்கணக்கான ரீல்ஸ்களை ஏராளமான பெண்கள்,கல்லூரி மாணவிகள் பதிவிட்டனர்.இதிலிருந்து மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி முதல் பரிசை அக்ஷயாவும்,இரண்டாம் பரிசை அதிதி ஜெயினும்,மூன்றாம் பரிசை தாரிணி பவித்ராவும் வென்றனர்.இவர்களுக்கு போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு.ரமேஷ் அவர்கள் முதல் பரிசாக போத்தீஸ் வழங்கும் ரூபாய் 15000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர், இரண்டாம் பரிசாக ரூபாய் 10000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர் மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 மதிப்புள்ள கிப்ட் வவுச்சர்களை பரிசுகளாக வழங்கினார் .

மேலும் சேலையை கௌரவிக்கும் விதமாக போத்தீஸ் சேலை தின இன்டெர் காலேஜ் ஃபெஸ்ட் நேற்று (டிசம்பர் 20) மீனம்பாக்கம் ஏ.எம் ஜெயின் கல்லூரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட வாக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் சேலை அணிந்து கொண்டு வண்ண தேவதைகளாக கலந்துகொண்டனர். இந்த வாக்கத்தான் போட்டியை ஏ.எம் ஜெயின் கல்லூரியின் டீன் முனைவர் ரம்யா அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார் மேலும் சிறப்பு விருந்தினராக திரை பிரபலமான நடிகை சனம் ஷெட்டி கலந்துகொண்டு கல்லூரி மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் வாக்கத்தான் போட்டியில் மாணவிகளுடன் இணைந்து நடந்தார்.போட்டியின் முடிவில் இதில் பங்கேற்ற அத்தனை கல்லூரி மாணவிகளையும் பாராட்டும் விதமாக அவர்களுக்கு மெடல்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

மேலும் செய்திகள்