< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
விருதுநகர்: சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு
|5 Dec 2024 10:17 PM IST
சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது சேலையில் தீப்பிடித்து பெண் உயிரிழந்தார்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி நாகலட்சுமி (48 வயது). இவர் சமையல் செய்வதற்காக அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றும் போது சிந்தியதாக கூறப்படுகிறது. இதனை கவனிக்காத அவர் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சேலையில் திடீரென தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது.
இதில் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.