ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலைரெயில்
|கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலைரெயிலை இயக்க உள்ளது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வனப்பகுதியின் இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம்-ஊட்டி மற்றும் ஊட்டி-மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு மலைரெயிலை இயக்க உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வருகிற 25-ந் தேதி, 27-ந் தேதி, 29-ந் தேதி, 31-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடைகிறது.
இதேபோன்று ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வருகிற 26-ந் தேதி 28-ந் தேதி, 30-ந் தேதி, அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந் தேதி என 4 நாட்கள் சிறப்பு மலைரெயில் இயக்கப்படுகிறது. ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு மலைரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.