< Back
மாநில செய்திகள்
விஜய்யின் உரை மெய்சிலிர்க்க வைத்தது - பாரிவேந்தர்
மாநில செய்திகள்

விஜய்யின் உரை மெய்சிலிர்க்க வைத்தது - பாரிவேந்தர்

தினத்தந்தி
|
27 Oct 2024 9:33 PM IST

விஜய்யின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள் என்று பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் 'வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய விஜய், " பாஜகவையும் திமுகவையும் நேரடியாக விமர்சித்தார்.

இந்த நிலையில், விஜய்யின் உரை குறித்து ஐ.ஜே.கே நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் தன்னெழுச்சியாக மக்கள் கூட்டம் வந்து கலந்து கொண்டதையும், அவர்களது உணர்வையும் பார்க்க முடிந்தது. மாநாட்டில் நீங்கள் ஆற்றிய உரை மெய்சிலிர்க்க வைத்தது, இன்றைக்கு எந்த கட்சி தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டுமோ? அதை துணிவோடும், தெளிவோடும், வீரத்துடனும், விவேகத்துடனும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் உங்கள் முயற்சி வெற்றி பெற தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எல்லாவற்றிலும் உச்சமாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் முக்கியத்தை முன்னிலைப்படுத்தி இருக்கிறீர்கள். வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்