< Back
மாநில செய்திகள்
திமுகவை பார்த்து விஜய் கேட்ட கேள்வி நியாயமானதுதான் - வானதி சீனிவாசன்
மாநில செய்திகள்

திமுகவை பார்த்து விஜய் கேட்ட கேள்வி நியாயமானதுதான் - வானதி சீனிவாசன்

தினத்தந்தி
|
28 Oct 2024 10:54 PM IST

எத்தனை கூட்டம் வந்தாலும் வாக்கு பெட்டியில் என்ன விழுகிறது என்பதுதான் விஷயம் என வானதி சீனிவாசன் கூறினார்.

சென்னை,

நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நிலையில், தனது முதல் மாநில மாநாட்டை நேற்று நடத்தினார். மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது;

"மாற்றத்தை நோக்கி மக்களை திருப்புவதற்காக விஜய் அரசியலில் இறங்கியுள்ளார். அதனால் அவர் திமுகவை பார்த்து கேட்கின்ற கேள்வி நியாயமானதுதான். ஏற்கெனவே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், அதன் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் ஆகியவற்றை எடுத்து விஜய் பேசியுள்ளார். இதற்கு மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து அவரின் வெற்றி அமையும்.

எத்தனை கூட்டம் வந்தாலும் வாக்கு பெட்டியில் என்ன விழுகிறது என்பதுதான் விஷயம். விஜய் ஒரு தேர்தலை பார்த்தபிறகு முடிவு செய்து கொள்ளலாம். ஆட்சியதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கருத்துகளை விஜய் கூறியது வரவேற்கத்தக்கது." என்றார்.

மேலும் செய்திகள்