< Back
மாநில செய்திகள்
த.வெ.க. மாநாட்டின்போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி
மாநில செய்திகள்

த.வெ.க. மாநாட்டின்போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு விஜய் நிதியுதவி

தினத்தந்தி
|
28 Nov 2024 4:59 PM IST

கடந்த மாதம் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது மாநாட்டிற்கு புறப்பட்டபோதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் 6 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மாநாட்டின்போது, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை விஜய் வழங்கினார்.

இதில், சென்னையைச் சேர்ந்த வசந்தகுமார், ரியாஸ், சார்லஸ் மற்றும் திருச்சி, திருவண்ணாமலையை சேர்ந்த மூன்று பேர் என மொத்தம் ஆறு பேருக்கு தலா ரூ.2 லட்சத்தை நிவாரணமாக விஜய் வழங்கியுள்ளார். மேலும், குடும்ப சூழல் பொருத்து, சிலருக்கு கூடுதல் நிதி மற்றும் இறந்தவர்களின் குழந்தைகள் கல்வி செலவும் த.வெ.க. ஏற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்