< Back
மாநில செய்திகள்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் மரியாதை
மாநில செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள்: அ.தி.மு.க. சார்பில் மரியாதை

தினத்தந்தி
|
3 Jan 2025 12:57 PM IST

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை ஒட்டி அ.தி.மு.க. சார்பில், மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை,

ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் 265-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை ஒட்டி அ.தி.மு.க. சார்பில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவச் சிலைக்கு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோரும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை ஒட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "தெற்குச் சீமையில் தாய் மண்ணைக் காப்பதற்காக, ஏகாதிபத்திய ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து போரிட்டு, உயிரை துச்சமெனத் துறந்து, தியாகம் செய்து, வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும், உன்னத தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்