< Back
மாநில செய்திகள்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விஜய் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு
மாநில செய்திகள்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு.. விஜய் பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்பு

தினத்தந்தி
|
27 Oct 2024 11:59 PM IST

தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

சென்னை,

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெற்றது. மாநாட்டின்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியதை விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வரவேற்றுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற எங்கள் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. எதிர்கால தமிழ்நாடு அரசியல் களம் அந்த கருத்தை முன்வைத்தே பயணப்படும் நிலைக்கு வந்துள்ளது. அதிகாரத்தில் அனைவருக்கும் சமமான பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதைத் தனது முதல் மாநாட்டு உரையில் உணர்ந்து பேசியிருக்கிறார் சகோதரர் விஜய்க்கு வாழ்த்துகள்.

'எல்லோருக்கும் எல்லாம்' என்ற அரசியலை முன்னெடுக்க, அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதே இனி எதிர்காலத்தின் அரசியல் கருத்தியல். தமிழ்நாடு அரசியல் களம் புதிய பாதையை நோக்கிப் பயணப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்