< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் - சட்டப்பேரவை செயலகத்தில் வி.சி.க. மனு
|4 Jan 2025 2:44 PM IST
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து விவாதிக்க வி.சி.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கப்படுள்ளது.
சென்னை,
தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் 6-ந்தேதி கூடுகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி, இன்று தமிழக சட்டப்பேரவை செயலகத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை வழங்கியுள்ளார்.
அந்த தீர்மானத்தில், சட்டமன்ற பேரவை விதி 55-ன் கீழ் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாகவும் வி.சி.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.