சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்
|சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள வனவாணி பள்ளியில் பெற்றோர்கள் அனுமதியின்றி ஆகஸ்ட்19-ம் தேதி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாணவர்களுக்கு மருந்துகள் எதுவும் செலுத்தப்படவில்லை என்று வனவாணி பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளித்தது.
இனிவரும் காலங்களில் பெற்றோரிடம் முறையான அனுமதி பெறாமல் சோதனை மேற்கொள்ளக்கூடாது எனவும் பெற்றோரின் அனுமதியின்றி சோதனை நடத்தப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், அனுமதியின்றி மாணவர்களுக்கு தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டிய நிலையில், சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சதிஷ்குமார் சஸ்பெண்ட் மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி விசாரணைக்குப்பின் இந்த நடவடிக்கையை ஐ.ஐ.டி. நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதனை தொடர்ந்து வனவானி பள்ளியின் புதிய முதல்வராக பிரின்சி டாம் நியமிக்கப்பட்டுள்ளார். மாணவர்களின் உடல் மற்றும் மன திறனை பரிசோதனை செய்வதே தாங்கு திறன் சோதனையின் நோக்கம் என்று கூறப்படுகிறது.