< Back
மாநில செய்திகள்
கோவை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு - வானதி சீனிவாசன் கண்டனம்
மாநில செய்திகள்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு - வானதி சீனிவாசன் கண்டனம்

தினத்தந்தி
|
15 Dec 2024 11:24 PM IST

பல்வேறு துறைகளில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கோவை,

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது,

கோவை மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததால் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிக வருவாய் கொடுக்கும் கோவை மாநகராட்சியில் மக்கள் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தராதது கண்டனத்துக்குரியது.

சட்டப்பேரவை கூட்டத் தொடர் இரு நாட்கள் நடத்தியது பெயருக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்பதால்தான் செயல்பட்டு உள்ளதாக தோன்றுகிறது. பல்வேறு துறைகளில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநில அரசின் பல்வேறு குறைபாடுகளுடன் மழை பாதிப்புகளும் சேர்ந்துள்ளது.மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை திமுக-வினர் பொருட்படுத்தாமல் உள்ளனர். இதற்கான பலனை 2026-ம் ஆண்டு தேர்தலில் அனுபவிப்பார்கள்.. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்