< Back
மாநில செய்திகள்
உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு
மாநில செய்திகள்

உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Dec 2024 10:43 AM IST

உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டாக்டர். உ.வே.சாமிநாத ஐயரை கவுரவிக்கு விதமாக அவரது பிறந்தநாளான (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக உறுப்பினர் கே.பி. முனுசாமி கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் பிப்ரவரி 19-ம் தேதி கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்