< Back
மாநில செய்திகள்

மாநில செய்திகள்
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ரெயில் சேவை ரத்து- தெற்கு ரெயில்வே

12 Feb 2025 5:47 PM IST
ஹூப்பள்ளி-ராமேசுவரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன, இந்த ரெயில் சேவை தற்போது ரத்துசெய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பின்வரும் சிறப்பு ரெயில் சேவைகள் செயல்பாட்டு காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
1. மார்ச் 22, 29, ஏப்ரல் 05, 12, 19, 26, 2025 ஆகிய தேதிகளில் காலை 06.50 மணிக்கு உப்பள்ளியில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்ட ரெயில் எண் 07355 ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படும்
2.மார்ச் 23, 30, ஏப்ரல் 06, 13, 20, 27, 2025 ஆகிய தேதிகளில் காலை 21.00 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்ட ரெயில் எண் 07356 ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
