< Back
மாநில செய்திகள்
மத்திய மந்திரியின் இறுமாப்பு பேச்சு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மாநில செய்திகள்

மத்திய மந்திரியின் இறுமாப்பு பேச்சு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தினத்தந்தி
|
16 Feb 2025 6:36 PM IST

மத்திய மந்திரியின் திமிர்த்தனமான பேச்சுக்கு மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசாங்கம் மும்மொழி கொள்கையை ஏற்க மறுப்பதும், தேசிய கல்விக் கொள்கையை அமலாக்க மறுப்பதும் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறியிருப்பதுடன், மாநிலத்திற்கு நிதி கொடுக்க மாட்டோம் என இருமாப்புடன் மறுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

அரை நூற்றாண்டாக தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை அமலில் இருக்கிறது. இருமொழிக் கொள்கையும், மாநிலத்திற்கென்று கல்விக் கொள்கை கடைப்பிடிப்பதும் ஏற்கனவே உள்ள நடைமுறைகள். அதன்படிதான் மாநிலத்திற்கான நிதியை மத்திய அரசுகள் விடுவித்து வருகின்றன.

எனவே, மந்திரியின் பேச்சுத்தான் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக, கல்விக்கான நிதியை மறுக்கும் அராஜகமாக உள்ளது. அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சட்டம் இருக்கும்போதே, ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை அமலாக்க நினைக்கிறார் மந்திரி. இந்த முயற்சி நடக்காது.

தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள், மந்திரியின் திமிர்த்தனமான பேச்சுக்கு உரிய பதிலடி தருவார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்