< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி மந்திரி சாமி தரிசனம்
|28 Nov 2024 2:31 PM IST
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய கல்வி மந்திரி சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சிபுரம்,
மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின்போது பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வருகை தந்தார்.
அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்ட தர்மேந்திர பிரதான், அங்கிருந்து தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.