< Back
மாநில செய்திகள்
ஜார்கண்ட் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

ஜார்கண்ட் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
28 Nov 2024 6:35 PM IST

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரியா ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

தமிழக துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அப்போது கருணாநிதி குறித்த ஆங்கில புத்தகத்தை ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி வழங்கினார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் சார்பில் கலந்துகொண்டேன். ஹேமந்த் சோரனுக்கும், அவரது அமைச்சரவைக்கும் மனமார்ந்த வாழ்த்து கூறினேன். அவரது வழிகாட்டுதலின் கீழ், ஜார்கண்ட் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முன்னேறி, மாநில மக்களின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். தமிழ்நாடு - ஜார்கண்ட் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை எதிர்நோக்கியுள்ளோம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்