< Back
மாநில செய்திகள்
தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
மாநில செய்திகள்

தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

தினத்தந்தி
|
27 Oct 2024 8:43 PM IST

விஜய் பேசியதை நான் கேட்கவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் 'வெற்றிக் கொள்கைத் திருவிழா' என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய விஜய், " பாஜகவையும் திமுகவையும் நேரடியாக விமர்சித்தார்.

இந்த நாட்டையே பாழ்ப்படுத்துகிற, பிளவுவாத அரசியல் செய்கிறவர்கள்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முழுமுதற் ஒரே கொள்கை எதிரி. அடுத்து திராவிட மாடல் என்று சொல்லி கொண்டும், பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொண்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளை அடிக்கிற ஒரு குடும்பம், சுயநலக்கூட்டம்தான் நமது அடுத்த எதிரி. அரசியல் எதிரி" என விஜய் பேசினார்.

இந்த நிலையில், விஜயின் உரை குறித்து செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், " விஜய் பேசியதை நான் கேட்கவில்லை. விஜய் பேசியதை கேட்டு விட்டு, பதில் அளிக்கிறேன்.விஜய்யின் முழுப் பேச்சை பார்த்த பிறகு தான், பேச முடியும்" என்றார்.

மேலும் செய்திகள்