உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார்: திண்டுக்கல் சீனிவாசன்
|எடப்பாடி பழனிசாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவதூறு கூறி வருகிறார் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதேபோன்று ரேஷன் கடைகளில் சரிவர பொருட்கள் வழங்குவதில்லை. அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக தேர்வு பெற்றது குறித்து, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசுகிறார்.
பெரியவர்கள் மற்றும் கடவுள் முன்பு விழுந்து வணங்குவது இயல்பு என்பதுகூட தெரியாமல், அதனை மோசமான செயல் என அவர் பேசிவருகிறார். அவருடைய தாத்தா கருணாநிதி, எம்.ஜி.ஆரிடம் இருந்து தட்டிப்பறித்து முதல்-அமைச்சர் ஆனார் என்ற வரலாறு தெரியாமல் பேசுகிறார். கடந்த தேர்தலில் திமுக முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அதிக ஓட்டுகளை பெற்றது. திமுக வாக்குவங்கி, அதிமுகவை விட குறைவாகவே பெற்று உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.