< Back
மாநில செய்திகள்
மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்த இருவர் கைது
மாநில செய்திகள்

மூதாட்டியிடம் 6 பவுன் தங்க சங்கிலி பறித்த இருவர் கைது

தினத்தந்தி
|
19 Nov 2024 2:15 AM IST

மூதாட்டியின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு ராதாகிருஷ்ணன் நகர் காந்தி தெருவை சேர்ந்தவர் ராமசாமி (வயது 84), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி மீனாட்சி (78). இவர்களின் 4 பிள்ளைகளும் திருமணமாகி வெளியூரில் வசிப்பதால் தம்பதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த 16-ந் தேதி நள்ளிரவு இவரது வீட்டின் 'காலிங் பெல்' தொடர்ந்து அடித்தது. இதனால் மீனாட்சி எழுந்து வந்து கதவு மற்றும் இரும்பு கேட்டை திறந்து வெளியே வந்தார். அப்போது இருட்டில் மறைந்திருந்த 2 பேர் மீனாட்சியின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து விருதம்பட்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மீனாட்சி வீட்டின் அருகே சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் சுற்றிந்திரிந்தபடி நோட்டமிடுவதை கண்டனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுன் சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்